புதிய உச்சத்தை தொட்டுள்ள முட்டையின் விலை

காய்கறிகள் விலை உயர்வு ஒருபக்கம் சாமானிய மக்களை மிரட்டிவரும் சூழலில் அந்த பட்டியலில் முட்டையும் சேர்ந்துள்ளது. தமிழகத்தில் முட்டை விலை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 ரூபாய் 75 காசுகளிலிருந்து 5 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 80 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளாக இருந்த சூழலில் தற்போது 30 காசுகள் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு முட்டை 6 ரூபாய் 50 காசுகள் முதல் 7 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த விலை இதுவரை கோழிப்பண்ணை வரலாற்றிலேயே இல்லாத அதிகபட்ச உச்ச விலையாக உள்ளது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி கேக் தயாரிக்கும் பணிக்கு அதிகளவு முட்டை தேவை ஏற்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளதாகவும், அதே சமயம் வட மாநிலங்களுக்கு தமிழக முட்டைகள் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுவதால், அதன் தேவை அதிகரித்து விலை உயர்வதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com