இடஒதுக்கீட்டை பின்பற்றவில்லையெனில் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

இடஒதுக்கீட்டை பின்பற்றவில்லையெனில் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

இடஒதுக்கீட்டை பின்பற்றவில்லையெனில் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து
Published on

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள விகிதாசாரத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவிகிதமும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவிகிதமும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவிகிதமும் பழங்குடியினருக்கு 1 சதவிகிதமும் மாணவர் சேர்கையில் இடஒதுக்கீடு வழங்குவதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டை பின்பற்றவில்லை பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com