\
தமிழகத்தில் 15 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 15 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 15 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு
Published on: 

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 15,659 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று 1,26,298 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரேநாளில் தமிழகத்தில் 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று 4,086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 4,206 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒரேநாளில் 82 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,557ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,05,180 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 11,065 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 9,63,251 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com