தமிழ்நாடு
மது ஒழிப்பை வலியுறுத்தி குமரி அனந்தன் 21 நாட்கள் நடைபயணம்
மது ஒழிப்பை வலியுறுத்தி குமரி அனந்தன் 21 நாட்கள் நடைபயணம்
மது ஒழிப்பை வலியுறுத்தி 21 நாட்கள் 360 கிமீ தூரம் நடைபயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தொடங்கியுள்ளார்.
மது ஒழிப்பு, பாரத மாதா கோயில், நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நடைபயணம் தொடங்கியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் அவர் இந்த பயணத்தை தொடங்கினார்.
சென்னையில் இருந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வரை 360 கிமீ தூரம் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். 21 நாட்களில் இந்த நடைபயணம் முடிவுபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக எம்பி கனிமொழி, திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு குமரி அனந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.