'தமிழைப் போற்றி வளர்த்திடுக': எடப்பாடி பழனிசாமி

'தமிழைப் போற்றி வளர்த்திடுக': எடப்பாடி பழனிசாமி

'தமிழைப் போற்றி வளர்த்திடுக': எடப்பாடி பழனிசாமி
Published on

தாய்மொழியான தமிழை அனைவரும் போற்றி வளர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துச் செய்தியில், நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை இந்த இனிய நாளில் போற்றிட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். மொழி என்பது ஒரு நாட்டின் பண்பாடு மற்றும் அடையாளம் எனத் தெரிவித்துள்ள பழனிசாமி, தமிழ்மொழியின் வளர்ச்சிக்காவும், தமிழறிஞர்களின் நலனைப் பேணிக் காக்கவும் எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகத் தாய்மொழி நாளில், தமிழர் பண்பாட்டையும், அடையாளத்தையும் காத்து வளர்த்திட, தமிழ்மொழியை அனைவரும் போற்றி வளர்த்திட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com