\
பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7லட்சம் நிதியுதவி : முதல்வர் அறிவிப்பு

பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7லட்சம் நிதியுதவி : முதல்வர் அறிவிப்பு

பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7லட்சம் நிதியுதவி : முதல்வர் அறிவிப்பு
Published on

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியால் தற்கொலை செய்துகொண்ட பிரதீபாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதீபாவின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, மேல்மலையனூரை அடுத்த பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியை கேட்டு மிகவும் துயரமடைந்ததாக தெரிவித்தார். மாணவ மாணவிகள் இதுபோன்ற விபரீத முடிவுகளை தவிர்க்க வேண்டும் என கூறிய முதலமைச்சர் பழனிசாமி, பிரதீபாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com