நிவாரணப் பணிகளை ஒருங்கிணையுங்கள்: முதல்வர் உத்தரவு

நிவாரணப் பணிகளை ஒருங்கிணையுங்கள்: முதல்வர் உத்தரவு
நிவாரணப் பணிகளை ஒருங்கிணையுங்கள்: முதல்வர் உத்தரவு

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கஜா புயலால் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்குப்புக்கு உள்ளாகியுள்ளன. கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு, தங்களது வீடு, கடைகள், கால்நடைகள், தோட்டம், விவசாய பயிர்கள் என அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து கையறு நிலையில் உள்ளனர். 

இந்நிலையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிப்புக்கான நிவாரணத்தொகையையும் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி ''கஜா புயலால் உயிரிழந்த 45 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 25,000 இழப்பீடும் வழங்கப்படும். கஜா புயலால் மொத்தம் 102 மாடுகளும், 633 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. புயலால் உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூ.30,000, ஆடு ஒன்றுக்கு ரூ. 3,000 இழப்பீடு வழங்கப்படும்; புயலால் சேதமடைந்துள்ள வீடுகளுக்கும் உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.

புயலால் 56942 குடிசைகல் முழுமையாகவும், 30404 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும் 30328 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளூக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். கஜா புயல் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும்'' என்று தெரிவித்தார். 

மேலும் மின்மாற்றிகள், மின் கம்பங்கள் சரிசெய்ய்யும் பணிகளில் 12532 மின் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயிர்சேத கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்கப்படும் சேதமடைந்த படகுகள் கணக்கிடப்பட்டு உரிய நிவாரணம் வழங்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com