தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் காரணமாக, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. வரும் 28 ஆம் தேதி மீண்டும் பேரவைக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், துறைவாரியாக அறிவிக்கப்படவிருக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற ப்படும் எனத் தெரிகிறது. மேலும், குடிநீர் தட்டுப்பாடு, கடுமையான வறட்சி தொடர்பாக சட்டப்பேரவையில் மேற்கொள்ள வேண்டிய விவாதம், நடவடிக்கை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் முடிந்ததும் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

