பஸ்ல போற அளவுக்கு வசதியாயிட்டிங்களா...!: நெட்டிசன்கள் மீம்ஸ்

பஸ்ல போற அளவுக்கு வசதியாயிட்டிங்களா...!: நெட்டிசன்கள் மீம்ஸ்
பஸ்ல போற அளவுக்கு வசதியாயிட்டிங்களா...!: நெட்டிசன்கள் மீம்ஸ்

பேருந்து கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் தற்போது பேருந்து கட்டண உயர்வு குறித்த பேச்சுதான் அதிகம். அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். பேருந்து கட்டண உயர்வு எதிரொலியாக சில இடங்களில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. 

இதுஒருபுறம் இருக்க சமூக வலைதளங்களில் பேருந்து கட்டண உயர்வை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை தீவிரமாக பதிவிட்டு வருகின்றனர். 

“என்ன மாப்ள எப்படி வரீங்க; கால் டாக்சில தான் மச்சான்; வேணாம் வேணாம் பக்கத்து வீட்டு காரன் கேவலமா பாப்பான் நீங்க டவுன் பஸ்ல வந்துருங்க” என்று ஒருவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார். 

அதேபோல், “என்ன மச்சா புது பைக் வாங்கிட்ட போல, அப்ப இனிமே பஸ்ல வர மாட்ட; ஏன் மச்சா நீ வேற பஸ்ல போற அளவுக்கு வசதி இருந்தா நா ஏன் பைக் வாங்க போரேன்.!” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகரம் மற்றும்
நகரங்களில் 1 முதல் 20 நிலைகளை கொண்ட வழித்தடத்தில் 3 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 5 ரூபாயாக
உயர்த்தப்பட்டுள்ளது. 12 ரூபாயாக இருந்த அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com