ஆகஸ்ட் 13-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்

ஆகஸ்ட் 13-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்
ஆகஸ்ட் 13-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்திருக்கிறார். மு.க.ஸ்டாலின் முதல்வரான பின்பு, தாக்கல் செய்யப்படும் இந்த முதல் நிதி அறிக்கையை பழனிவேல் தியாகராஜன் வருகிற 13-ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கிறார்.

இந்த ஆண்டு வேளாண் துறைக்கென தனி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, 16-ஆம் தேதி வேளாண் துறை சார்ந்த நிதிநிலை அறிக்கையை எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இன்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவக் வெளியாகி இருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு முதல்வர் வெளியிட்டிருந்த அறிக்கையில், முதன்முறையாக 2 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்த பிறகு தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி, ஆலோசனைக்குப்பிறகு அடுத்த வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதேபோல், தமிழகத்தில் பொருளாதார சிக்கல் அதிகம் இருக்கும் இந்த நேரத்தில் வருமானத்தைப் பெருக்கும் பல திட்டங்களும் இந்த அறிக்கையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com