ரூ.1600 கோடியில் புதிய மீன்பிடித் திட்டம்

ரூ.1600 கோடியில் புதிய மீன்பிடித் திட்டம்

ரூ.1600 கோடியில் புதிய மீன்பிடித் திட்டம்
Published on

ரூ.1600 கோடி திட்ட மதிப்பில் புதிய மீன்பிடித் திட்டம் வங்கக்கடலில் செயல்படுத்தப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

2019- 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 8 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு, அவர் தாக்கல் செய்யும் 2 வது பட்ஜெட் இது. 

பட்ஜெட் உரையில் அவர் கூறும்போது, வங்கக்கடலில் 1600 கோடி திட்ட மதிப்பில் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 500 இழுவை படகுகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்துக்காக 170.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, மார்த்தாண்ட துறை பகுதிகளில் கடல் அரிப்பு தடுப்பான் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம், பூம்புகார் துறைமுகத்தில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. 420 கோடி செலவில் தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒக்கி புயலுக்கு பிறகு மீனவர்களிடமிருந்து கரையோரத் துக்கு சீரான தொலைதொடர்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மீனவர்கள் தகவல் தொடர்புக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள், 18 கட்டுப்பாட்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com