தமிழக பட்ஜெட்: தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.54.76 கோடி ஒதுக்கீடு
தமிழ் மொழி வளர்ச்சிக்காக, பட்ஜெட்டில் 54.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019- 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் 8 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார். ஜெயலலிதா மறைந்த பிறகு, அவர் தாக்கல் செய்யும் 2 வது பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக, ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ’தமிழ் பண்பாட்டை காப்பாற்ற அரசு உறுதியாக உள்ளது. யுனெஸ்கோவின் செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் மொழி, 14 வது இடத்தில் இருக்கிறது. அதை 10 வது இடத்துக்கு கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறோம்’ என்றும் தெரிவித்தார். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளதாகவும், பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

