"பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்தினால் தமிழகத்தின் பாதி கடனை அடைத்துவிடலாம்" அண்ணாமலை

தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி எங்கு போட்டியிட்டாலும் வெற்றிப்பெறுவார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் - அண்ணாமலை
முதல்வர் ஸ்டாலின் - அண்ணாமலை PT WEB

மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் நியாயமானதுதான். திமுக அரசு போக்குவரத்து கழகத்தை நிர்மூலமாக்கிவிட்டனர். மாநில அரசு 8-ஆம் தேதி நடத்தும் பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

பழைய பென்சன் திட்டத்திற்கு செல்ல சாத்தியக்கூறு இல்லை என முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். திமுக அரசின் தவறான வாக்குறுதியால்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை போட்டிக்கு சம்மந்தமே இல்லாத இடத்தில் கட்டியுள்ளனர். பொதுமக்களும், காளை உரிமையாளர்களும் மைதானத்திற்கு செல்ல தயாராக இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட பொதுமக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வரும் காலத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் கலைஞர் என பெயர் தான் வைக்க வேண்டும் எனக் கூறுவார்கள்.

முதல்வர் ஸ்டாலின் - அண்ணாமலை
கிருஷ்ணகிரி | கொத்தனாரின் மூக்கை கடித்து தாக்குதல்... தலைமறைவான தொழிலாளியால் பரபரப்பு!

பத்திரப்பதிவுத்துறையில் "மூர்த்தி பீஸ்" என தனியாகவே வாங்கப்படுகிறது. தினமும் கோடிக்கணக்கான ரூபாய், புரோக்கர் மூலமாக செல்கிறது. பத்திரப்பதிவுத்துறை மிக மோசமாக பண வசூல் துறையாக மாற்றியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை தினசரி பத்திரப்பதிவு அலுவலகத்திலும், புரோக்கர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தினால் கோடி கோடியாக பணம் சிக்கும். தமிழ்நாடு அரசு பாதி கடனை அடைத்துவிடலாம்.

முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2024-க்கான நாடாளுமன்ற தேர்தல், மோடிக்கான தேர்தல். மோடியைவிட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி தமிழகத்தில் யாருக்கும் இல்லை. அப்படி இருப்பதாக கூறினால் மக்கள் சிரிப்பார்கள். இந்த தேர்தலில் யாரெல்லாம் மோடியை ஏற்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம்.

தமிழகத்தில் பாஜக பலமாக உள்ளது. நான் எந்தக் கூட்டணி தலைவரையும் சந்திக்கவில்லை. சந்திக்கப் போவதும் இல்லை. அவர்களுக்கு ஆதரவு வேண்டும் என்றால் எங்களை பார்ப்பார்கள். என்னுடைய வேலை பாஜகவை பலப்படுத்துவதுதான். அந்த வேலையை வெற்றிகரமாக செய்கிறேன். மற்ற கட்சியை பலப்படுத்துவது எனது வேலை இல்லை.

முதல்வர் ஸ்டாலின் - அண்ணாமலை
“புகார் கொடுத்த எங்களையே மிரட்டுறாங்க.. நீதி வேண்டும்“ - 13 வயது மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

தமிழகத்தில் திமுக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன என்பதை காட்ட, நானும் கையில் செங்கல்லை எடுத்து சுத்தப்போகிறேன்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

2024 -மட்டுமல்ல 2038 வரை மோடி அவர்கள்தான் பிரதமர். திமுகவில் உள்ள 35 அமைச்சர்களில் எத்தனை பேர் தமிழர்கள். இங்கு ஓங்கோலில் இருந்து வந்தவர்களை தமிழர் என்கிறார்கள். குஜராத்தில் பிறந்து தமிழ் மீதான ஆர்வத்தை காட்டும் மோடி கண்டிப்பாக தமிழன்தான். அவரை ஏன் தமிழன் என்று சொல்லக்கூடாது. டெல்டாவிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மோடிதான் உண்மையான டெல்டாகாரர். தமிழகத்தில் மோடி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com