தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், அண்ணாமலை தலைமையில் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், எல். முருகன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும், தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயாராவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தின் எல்லையை தாண்டினால் இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்வதாகக் கூறினார். மேலும் பாஜகவின் வெற்றியை கொண்டாடுவதற்கு தயாராகுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.