நீட் தேர்வு ரத்து - என்ன சொல்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை?

நீட் தேர்வு ரத்து - என்ன சொல்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை?

நீட் தேர்வு ரத்து - என்ன சொல்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை?
Published on

நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில், “நீட் தேர்வு சில மாநில மாணவர்களுக்கு எதிராக பாகுபாடுடன் உள்ளது. மேலும், மாநில அரசின் உரிமைகளில் அது தலையிடுகிறது. அதாவது, மாணவர்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளிலேயே படிப்பதற்கு வகை செய்யும் மாநில அரசு உரிமையில் தலையிடுகிறது. நீட் தேர்வை கைவிடுவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதற்கு பதிலாக மாநில அளவில் தரமான தேர்வு நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது. 

மருத்துவம், பல்மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம் போன்றவற்றில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுமைக்கு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் உயிரிழப்பை தொடர்ந்து இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. 

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானம் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் உடன் தமிழகத்தில் கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தன. அதேபோல், ஆளும் அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com