நாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

நாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
நாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி‌ வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை 10 லட்சத்து ஆயிரத்து 140 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணியும் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் நாளை காலை 9.30 மணி அளவில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்படவுள்ளன. 

இதனை www.tnresults.ac.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதுதவிர பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். நாளை வெளியாகவுள்ள தேர்வு முடிவை அவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி மாணவர்கள் மற்றும் பெற்றோர் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com