தமிழகத்தில் சாலை விபத்தில் 14,077 பேர் உயிரிழப்பு: தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் நடப்பாண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 14 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டைக்காட்டிலும், நடப்பாண்டில் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை நிகழ்ந்த சாலை விபத்தில் 14,077 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளும், பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர்களும் என 4 ஆயிரத்து 730 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டைக்காட்டிலும், நடப்பாண்டில் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரு சக்கர வாகன விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க வாகன விற்பனை நிலையங்களில் 'சாலை பாதுகாப்பு மையம்' உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.