விரைவுச் செய்திகள்: கோவின் - தமிழ் புறக்கணிப்பு | 5ஜி வழக்கு தள்ளுபடி | கனமழை வாய்ப்பு

விரைவுச் செய்திகள்: கோவின் - தமிழ் புறக்கணிப்பு | 5ஜி வழக்கு தள்ளுபடி | கனமழை வாய்ப்பு
விரைவுச் செய்திகள்: கோவின் - தமிழ் புறக்கணிப்பு | 5ஜி வழக்கு தள்ளுபடி | கனமழை வாய்ப்பு

கொரோனா தடுப்பூசி முன்பதிவிற்கான கோவின் இணையதளத்தில் தமிழ் புறக்கணிப்பு என சர்ச்சை எழுந்துள்ளது. ஆங்கிலம், இந்தியுடன் புதிதாக சேர்க்கப்பட்ட 9 மொழிகளில் தமிழ் இடம்பெறவில்லை.

கோவாக்சினுக்கு விரைவில் சர்வதேச அங்கீகாரம்: கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பல்வேறு ஆவணங்களை பகிர்ந்து கொண்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

5ஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: 5ஜி தொலைபேசி சேவைக்கு எதிராக நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு எனக் கூறியதுடன் 20 லட்சம் ரூபாய் அபாரதமும் நீதிபதிகள் விதித்தனர்.

வண்டலூரில் 9 சிங்கங்களுக்கு கொரோனா: சென்னை அருகே வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 சிங்கங்களுக்கு சளி தொந்தரவு இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வெளியான இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் தடுப்புக்கு குழு: கொரோனா பரவல் தடுப்பிற்காக 13 பேர் கொண்ட நடவடிக்கை குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையிலான குழுவில் மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு?: தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் மிகக் குறைவாக உள்ள பகுதிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியின் தாளாளர், முதல்வரிடம் விசாரணை: சென்னையில் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் விவகாரம் குறித்து பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளரிடம் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் 3 மணி நேரம் விசாரணையில் நடத்தினர்.

பயிற்சியாளரை 3 நாள் விசாரிக்க அனுமதி: பாலியல் புகாருக்கு ஆளான விளையாட்டு பயிற்சியாளர் நாகராஜனை 3 நாள் விசாரிக்க காவல் துறைக்கு சென்னை போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com