விரைவுச் செய்திகள்: மீண்டும் இயங்கும் இ-பதிவு சைட் | பெட்ரோல் விலை உயர்வு - விளக்கம்

விரைவுச் செய்திகள்: மீண்டும் இயங்கும் இ-பதிவு சைட் | பெட்ரோல் விலை உயர்வு - விளக்கம்
விரைவுச் செய்திகள்: மீண்டும் இயங்கும் இ-பதிவு சைட் | பெட்ரோல் விலை உயர்வு - விளக்கம்

தமிழகத்தில் காலை முதல் முடங்கியிருந்த இ- பதிவுக்கான இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பதிவுகள் தொடங்கப்பட்டது.

இன்று மாலை பிரதமர் மோடி உரை: இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா 2ஆவது அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.

புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு ரத்து: புதுச்சேரி மாநிலத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் +2 தேர்வு நடைபெறாது என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

2 -18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை: 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது.

ஆன்லைன் வகுப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் தயார்: ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். +2 மதிப்பெண் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும் என்றும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்: தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புராதன கோயில்களை பாதுகாக்க மத்திய சிலைக்கடத்தல் பிரிவு அமைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

ரூ.250 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு: சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட 250 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு நடத்தினார்.

பெட்ரோல் விலை உயர்வு - அமைச்சர் விளக்கம்: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதே காரணம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு - ராகுல் கண்டனம்: பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி அரசில் வரி வசூல் என்ற தொற்று அலையலையாக வந்து கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

செப்.19 முதல் ஐபிஎல் தொடர்கிறது?: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 வரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் ரயில் விபத்து - 50 பேர் பலி: பாகிஸ்தானில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 50 பேர் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com