விரைவுச் செய்திகள் | கோவையில் கொரோனா | பேரறிவாளனுக்கு பரோல் | தொடங்கும் பருவமழை

விரைவுச் செய்திகள் | கோவையில் கொரோனா | பேரறிவாளனுக்கு பரோல் | தொடங்கும் பருவமழை
விரைவுச் செய்திகள் | கோவையில் கொரோனா | பேரறிவாளனுக்கு பரோல் | தொடங்கும் பருவமழை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 மாதங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி கூட்டம்: 8 மாதங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் இன்று கூடுகிறது. தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கு வரி விலக்கு கோர மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் கோவை: கோவை மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. திருப்பூரிலும் ஒரே நாளில் 2,024 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்: கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு தனி ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

44 நாட்களில் இல்லாத அளவாக பாதிப்பு குறைவு: இந்தியாவில் ஒன்றரை மாதத்தில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 364 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை - இன்று ஆலோசனை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுகுறித்த தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

30 நாட்கள் பரோலில் வந்தார் பேரறிவாளன்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்த பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவைத் தொடர்ந்து, அவருக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது புகார்: சென்னை மகிரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து விசாரித்து வருவதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் புகார்: சென்னையில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

குமரியில் மெல்ல திரும்பும் இயல்புநிலை: மழை நின்றதால், கன்னியாகுமரியில் முக்கிய அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒரே நாளில் 3.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தமிழகத்தில் ஒரேநாளில் 3 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இளைஞர்களில் அதிகம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.

'சாப்பாட்டு ராமன்' கைது செய்யப்பட்டு விடுவிப்பு: முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்த புகாரில், சாப்பாட்டு ராமன் என்றழைக்கப்படும் பொற்செழியன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

'கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து இல்லை': இந்தியாவில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து இல்லை என ட்விட்டர் நிறுவனம் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

லட்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் தலையிடக் கோரிக்கை: லட்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் தலையிடக்கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். நிர்வாகியை திரும்ப பெறுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தியுள்ளார்.

மே 31 முதல் பருவமழை: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது. இதனால் மே 31 ஆம் தேதி முதல் கேரளாவில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com