விரைவுச் செய்திகள்: ஊரடங்கு தளர்வுகள் |குறைந்த கொரோனா பாதிப்பு | யோகா தினம்

விரைவுச் செய்திகள்: ஊரடங்கு தளர்வுகள் |குறைந்த கொரோனா பாதிப்பு | யோகா தினம்
விரைவுச் செய்திகள்: ஊரடங்கு தளர்வுகள் |குறைந்த கொரோனா பாதிப்பு | யோகா தினம்

மாவட்டங்களை மூன்று வகைகளாக பிரித்து இன்று முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

காலை 6.30 - இரவு 9 மணிவரை மெட்ரோ ரயில் சேவை: சென்னையில் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணிவரை மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்வோர் வசதிக்காக காலை மற்றும் மாலையில் 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 7 மணி வரை காய்கறி, மளிகைக்கடைகள்: கடலூர், ராமநாதபுரம், வேலூர், தென்காசி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கடைகள் கூடுதல் நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் இரவு 7 மணி வரை செயல்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் ஏதுமில்லை. ஏற்கனவே உள்ள தளர்வுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா, சீரியல் படப்பிடிப்புக்கு அனுமதி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் திரைப்பட மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், ஜவுளிக்கடைகள் செயல்பட தடை நீடிக்கிறது.

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை: 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. மேகதாது அணை, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக உள்ளது.

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு தற்போது சாத்தியமில்லை: தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் மீதான மாநில வரியை குறைப்பது தற்போது சாத்தியமில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். வரி வருவாய் அதிகரித்தபோதிலும் மாநிலத்திற்கான பங்கை ஒன்றிய அரசு வழங்கவில்லை என அவர் குற்றச்சாட்டி இருக்கிறார்.

தங்கக் கடத்தல் - 53 பேருக்கு சுங்கத்துறை நோட்டீஸ்: கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்ணா சுரேஷ் உட்பட மொத்தம் 53 பேருக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'பப்ஜி' மதனின் யூ டியூப் சேனல்கள் முடக்கம்: ஆபாச பேச்சு விவகாரத்தில் 'பப்ஜி' மதனின் யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது. அவரைக் கைது செய்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மணிகண்டன் மீதான வழக்கின் பிரிவு மாற்றம்: நடிகை அளித்த புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை மாற்ற காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய்க்கசிவு: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய்க் கசிந்தது. குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனே சரிசெய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரத்திற்கு கீழ் கொரோனா: கோவை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. மாநிலம் முழுவதும் 24 மணி நேரத்தில் 7, 817 பேருக்கு தொற்று உறுதியானது.

புதிய தடுப்பூசி கொள்கை இன்றுமுதல் அமல்: மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி திட்டம் வேகம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

மாற்றத்தை விரும்புகிறதா பஞ்சாப்?: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று பஞ்சாப் செல்கிறார். அவர் மாநிலத்திற்குள் வரக்கூடாது என காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு காட்டிவருகின்றனர்.

இன்று சர்வதேச யோகா தினம்: இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி நாட்டு மக்களுக்கு ‘நோய்நாடி... திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி இன்று காலை சிறப்புரையாற்றினார்.

ஐ.நா ஆட்சேபம் - இந்தியா பதில்: இந்தியாவின் புதிய தகவல் தொழில் நுட்ப விதிகள் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே உள்ளது என ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஆட்சேபம் தெரிவித்த நிலையில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

217 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது. 3ஆவது நாள் முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்தது நியூசிலாந்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com