விரைவுச் செய்திகள்: 4 மாவட்டங்களில் கனமழை | ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம்

விரைவுச் செய்திகள்: 4 மாவட்டங்களில் கனமழை | ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம்
விரைவுச் செய்திகள்: 4 மாவட்டங்களில் கனமழை | ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம்

சென்னையில் 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து: சென்னையில் தேர்தலுக்குமுன் அவசர கதியில் போடப்பட்ட 660 சாலை சீரமைப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது. பொறியாளர் குழு ஆய்வு செய்த நிலையில் மாநகராட்சி ஆணையர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க உத்தரவு: மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை சேமிக்க தமிழகத்தில் அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

கைதான பாதிரியாருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்: இந்து மத நம்பிக்கைகளை இழிவாக பேசிய புகாரில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றம் உத்தரவையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

'சார்பட்டா' படத்திற்கு ஜெயக்குமார் எதிர்ப்பு: சார்பட்டா படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி இருக்கிறார். கலை மூலம் உண்மைகளை மறைப்பது வருங்கால தலைமுறைக்கு செய்யும் துரோகம் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சென்னை ஐசிஎஃப் தனியார்மயமாகாது: சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலை தனியாருக்கு ஒருபோதும் தரப்படாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்திருக்கிறார்.

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்திற்கான நீர்வரத்து உயர்வு: கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலியாக தமிழக எல்லைக்கு வரும் காவிரி நீரின் அளவு 22 ஆயிரம் கன அடியாக உயர்ந்திருக்கிறது.

சோலையார் அணை திறப்பு: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்ததால் சோலையாறு அணை திறக்கப்பட்டது.

யானைகள் வழித்தடம், வாழிடம் குறித்து ஆய்வு: தமிழ்நாட்டில் யானைகளின் வாழ்விடம், வழித்தடங்கள் குறித்து கண்டறிய நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தப்படுகிறது. யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு இந்த தகவலைத் தெரிவித்திருக்கிறது.

முதல் பதக்கத்தை வென்றது இந்தியா: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளியுடன் பதக்க கணக்கை துவக்கியது இந்தியா. மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு.

குத்துச்சண்டையில் விகாஸ் கிரிஷன் தோல்வி: ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் வெற்றி வாய்ப்பை இழந்தார். முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரரிடம் தோல்வியைத் தழுவினார்.

வெற்றியுடன் தொடங்கிய இந்திய ஹாக்கி அணி: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. 'ஏ' பிரிவு போட்டியில் நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

டேபிள் டென்னிஸ் - இந்திய மகளிர் வெற்றி: டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றிபெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜியும் 2ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கிறார்.

நிலையான சுரங்க கொள்கையை உருவாக்க அறிவுறுத்தல்: சுற்றுச்சூழல் பாதிக்காமல் சுரங்கப்பணிகளை மேற்கொள்ள நிலையான சுரங்கக் கொள்கையை உருவாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி: பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சேற்றில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேற்றில் சிக்கி யானைக்குட்டி உயிரிழந்தது. உடலை மீட்கவிடாமல் இரண்டு யானைகள் பாசப் போராட்டம் நடத்தியது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

மண்சரிவால் தடம்புரண்ட ரயில்: கர்நாடகா மாநிலம் பெலகாவியில் மண்சரிவால் ரயில் தடம் புரண்டது. ரயிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயணிகள் தவித்துவருகின்றனர்.

மகாராஷ்டிராவில் இதுவரை 136 பேர் உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் நிலச்சரிவு உள்ளிட்ட மழை தொடர்பான பாதிப்புகளில் இதுவரை 136 பேர் உயிரிழந்தனர். தொடர் மழையால் கோவா, தெலங்கானா மாநிலங்களும் தத்தளித்து வருகிறது.

ஆஃப்கன் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவும்: ஆஃப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தலிபான்கள் தாக்குதல் தீவிரமடையும் நிலையில் காபூலில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்தோனேஷியாவுக்கு இந்தியா உதவி: கொரோனா பாதிப்பால் தவிக்கும் இந்தோனோஷியாவுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. திரவ ஆக்சிஜன், செறிவூட்டிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் சென்றடைந்தது இந்திய கடற்படைக்கப்பல்.

உளவு விவகாரம் - அமெரிக்கா கவலை: சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்படுவதாக வெளியான தகவல் கவலை தருகிறது என தெற்கு ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை அமைச்சர் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com