விரைவுச் செய்திகள்: சென்னையில் புறநகர் ரயில்சேவை | டெல்டா + | காஷ்மீரில் தேர்தல்?

விரைவுச் செய்திகள்: சென்னையில் புறநகர் ரயில்சேவை | டெல்டா + | காஷ்மீரில் தேர்தல்?
விரைவுச் செய்திகள்: சென்னையில் புறநகர் ரயில்சேவை | டெல்டா + | காஷ்மீரில் தேர்தல்?

ஊரடங்கு தளர்வுகள் குறித்து மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்: காணொலி வாயிலாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது. தமிழகத்திற்கான நீர் திறப்பு, மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புறநகர் ரயிலில் ஆண்களுக்கு கட்டுப்பாடு: சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
ஆண் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் எப்போதும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.100-ஐ கடந்த பெட்ரோல் விலை: கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மேலும் 11 மாவட்டங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்தது. தொடர் உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆளுநர் உரை வெறும் ட்ரெய்லர் தான்: ஆளுநர் உரை வெறும் முன்னோட்டம் தான், முழுப்படம் பட்ஜெட்தான் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வேலைவாய்ப்பை பெருக்க பின்தங்கிய மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மின்பகிர்மான கழகத்திற்கு ரூ.424 கோடி இழப்பு: ஒரு யூனிட் மின்சாரத்தை 12 ரூபாய் அளவுக்கு வாங்கியதால் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு 424 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

+2 மதிப்பெண் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு: +2 மாணவர்கள் 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை 30ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ரூ.2,000 - இன்றைக்குள் வழங்க உத்தரவு: ரேஷன் கடைகளில் கொரோனா இரண்டாம் தவணை உதவித் தொகை விநியோகத்தை இன்றைக்குள் வழங்கி முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்டா + குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை: டெல்டா ப்ளஸ் வைரசுக்கு மத்தியப் பிரதேசத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. புதிய தொற்றை கண்டு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் - திமுக ஆலோசனை: சென்னையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.

காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - பிரதமர்: ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அனைத்துக் கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.

சீட்டுக் கட்டுப் போல சரிந்த கட்டடம்: அமெரிக்காவில் சீட்டுக் கட்டுப் போல 12 மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 12 வயது சிறுவன் உள்பட 35 பேர் மீட்கப்பட்டனர்.

கோபா அமெரிக்கா - காலிறுதியில் உருகுவே: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் காலிறுதியை உருகுவே உறுதி செய்தது. மூன்றாவது லீக் போட்டியில் பொலிவியா அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com