விரைவுச் செய்திகள்: ட்விட்டருக்கு மத்திய அரசு இறுதி கெடு | தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு ரத்து

விரைவுச் செய்திகள்: ட்விட்டருக்கு மத்திய அரசு இறுதி கெடு | தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு ரத்து
விரைவுச் செய்திகள்: ட்விட்டருக்கு மத்திய அரசு இறுதி கெடு | தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு ரத்து

+2  பொதுத் தேர்வு ரத்து: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும் முதலவ்ர் அறிவிப்பு.

2025 முதல் பெட்ரோலில் 20% எத்தனால்: பெட்ரோலில் சேர்க்கப்படும் எத்தனாலின் அளவு 2025ஆம் ஆண்டு முதல் 20% ஆக உயர்த்தப்படும் என உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

விலை உயர்வுக்கு எதிராக போராட்டம்: பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து மும்பையில் இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை மீறிச்சென்றபோது காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அடுத்த 2 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை: அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, மதுரை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர், பெரம்பலூர், தருமபுரி, நெல்லை, தூத்துக்குடியிலும் மழை பெய்யும் என கூறியுள்ளது.

ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி: பாலியல் புகாரில் கைதாகியிருந்த ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. போலீசாரின் எதிர்ப்பையடுத்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

காய்கறி, மளிகை கடைகள் காலை 6 - மாலை 5 வரை இயங்கும்: ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில், தமிழகம் முழுவதும் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி: காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீன் சந்தைகள், இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ, டேக்ஸியில் இ பதிவுடன் செல்லலாம்: பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் ‌எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள் போன்ற சுயதொழில் செய்வோர் இ பதிவுடன் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதித்துள்ளது.

11 மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள்: கொரோனா பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள், ஹார்டுவேர் கடைகள், புத்தக கடைகள் திறக்க தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தீப்பெட்டி ஆலைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு தடை நீடிக்கிறது: ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் பேருந்துகள், வணிக வளாகங்களுக்கான தடை தொடர்கிறது. வழிபாட்டுத் தலங்கள், முடி திருத்தும் நிலையங்கள், டாஸ்மாக் கடைகளுக்கும் தடை நீடிக்கிறது.

நீட் தேர்வு பாதிப்பு - ஆய்வு செய்ய குழு: தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி குழு ஆய்வு செய்யும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ்-உடன் ஈபிஎஸ் திடீர் சந்திப்பு: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடந்துள்ளது.

ட்விட்டருக்கு மத்திய அரசு இறுதி கெடு: அரசின் விதிமுறைகளை உடனடியாக பின்பற்ற ட்விட்டர் சமூக தளத்திற்கு கடைசி கெடு விதித்துள்ளது. விதிகளை அனுசரிக்காவிட்டால் நடவடிக்கை பாயும் என மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியாக உயர்வு: மே மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் 65% உயர்ந்து ஒரு லட்சத்து 2 ஆயிரம் கோடியை தொட்டது. தொடர்ந்து 8ஆவது மாதமாக அதிகரிப்பு என மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கனமழையால் வெள்ளம்: இலங்கையில் கனமழையால் 5 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com