விரைவுச் செய்திகள்: சட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டம் | மதுரை மலர் சந்தை மூடல்

விரைவுச் செய்திகள்: சட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டம் | மதுரை மலர் சந்தை மூடல்
விரைவுச் செய்திகள்: சட்டமன்ற  நூற்றாண்டு விழா கொண்டாட்டம் | மதுரை மலர் சந்தை மூடல்

சட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கோலாகலம்: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சட்டமன்றத்தில் மு.கருணாநிதி படம் திறப்பு: தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படம் திறக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

குடியரசுத் தலைவர்களுடன் நெருக்கமானவர்: 70 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இந்தியாவின் அனைத்து குடியரசுத் தலைவர்களிடமும் கருணாநிதி நெருக்கமாக இருந்தவர் என சட்டமன்ற நூற்றுாண்டு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.

முதல்வராக மகிழ்கிறேன்; மகனாக நெகிழ்கிறேன்: சட்டமன்றத்தில் கருணாநிதியின் படத்தை திறந்ததில் முதல்வராக மகிழ்கிறேன்; அவர் மகனாக நெகிழ்கிறேன் என சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.

சட்டமன்ற நூற்றாண்டு விழா - அதிமுக புறக்கணிப்பு: தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்தது. வரலாற்றை மறைத்து விழா நடத்துவதை ஏற்க முடியாது என ஜெயக்குமார் பேட்டியளித்திருக்கிறார்.

மதுரை மலர் சந்தையை மூட உத்தரவு: கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அண்ணா பல்கலை துணை வேந்தராக தமிழரே வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்தவரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என ஆளுநருக்கு ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கிறது.

ரத்து செய்த பிரிவில் வழக்கு - உச்சநீதிமன்றம் நோட்டீஸ்: ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ-வில் வழக்குப்பதிவு செய்வதை எதிர்த்த வழக்கில் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது: பாலியல் புகாரில் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மூன்றாவது போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.

வனத்துக்குள் விடப்பட்ட ரிவால்டோ: நீலகிரி மாவட்டத்தில் பிடிபட்ட ரிவால்டோ யானை திடீரென வனப்பகுதியில் விடப்பட்டது. சாஃப்ட் ரீலிஸ் முறையை கைவிட்டது வனத்துறை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com