விரைவுச் செய்திகள்: மாவட்டங்களை வகைப்படுத்தி தளர்வுகள் | இந்திய அணி தடுமாற்றம்

விரைவுச் செய்திகள்: மாவட்டங்களை வகைப்படுத்தி தளர்வுகள் | இந்திய அணி தடுமாற்றம்
விரைவுச் செய்திகள்: மாவட்டங்களை வகைப்படுத்தி தளர்வுகள் | இந்திய அணி தடுமாற்றம்

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 28ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தாக்கம் அடிப்படையில் மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகளை அறிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் பேருந்துகளுக்கு அனுமதி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 50 சதவிகித இருக்கைகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோவில் பயணிக்க இ-பதிவு அவசியமில்லை.

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்: சென்னையில் 50 சதவித பயணிகளுடன் மெட்ரோ ரயில்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் 3 அண்டை மாவட்டங்களில் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

23 மாவட்டங்களில் கூடுதல் சலுகைகள்: அரியலூர், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கடைகள் கூடுதல் நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் நிறுவனங்களும் 33% பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை: பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வகை ஒன்றாக அறிவிக்கப்பட்டதுடன், அங்கு ஏற்கனவே உள்ள தளர்வுகள் தொடரும் எனவும் கூடுதல் தளர்வுகள் இல்லை எனவும் அறிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் கட்டுமான பணிக்கு அனுமதி: பாதிப்பு குறைவான 27 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் அனைத்து வகையான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

27 மாவட்டங்களுக்கிடையில் இ-பாஸ் தொடரும்: 27 மாவட்டங்களுக்கிடையில் திருமண நிகழ்வுகளுக்கு இ பாஸ் பெற்று பயணிக்கலாம் என்றும், மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணைய வழியாக அனுமதி பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மணிகண்டனிடம் விசாரணை: துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் சென்னையில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்க உடந்தையாக இருந்த உதவியாளர்களும் சிக்கினர்.

மின்நுகர்வோர் சேவை மையம் திறப்பு: சென்னை மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மின்தடை உள்ளிட்ட புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை: மாநிலத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். பெட்ரோல்-டீசல் மீதான மாநில வரியை குறைப்பது தற்போது சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அணி தடுமாற்றம்: நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

யூரோ கால்பந்து: இத்தாலி - வேல்ஸ் மோதல்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் இத்தாலி - வேல்ஸ் அணிகள் மோதியது. மற்றொரு ஆட்டத்தில் துருக்கி - சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com