விரைவுச் செய்திகள்: மேகதாது கூட்டம் - 3 தீர்மானங்கள் | அரசியலில் ஈடுபடமாட்டேன் - ரஜினி

விரைவுச் செய்திகள்: மேகதாது கூட்டம் - 3 தீர்மானங்கள் | அரசியலில் ஈடுபடமாட்டேன் - ரஜினி
விரைவுச் செய்திகள்: மேகதாது கூட்டம் -  3 தீர்மானங்கள் | அரசியலில் ஈடுபடமாட்டேன் - ரஜினி

மேகதாது - 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்: மேகதாது பிரச்னை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. டெல்லி சென்று ஒன்றிய அரசை நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு முழு உரிமை உள்ளது: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு முழு உரிமை உள்ளது என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.

அரசியலில் ஈடுபடமாட்டேன் - ரஜினி திட்டவட்டம்: வரும் காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். காலசூழலால் நினைத்தது சாத்தியப்படாத நிலையில் மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும் அறிவித்துள்ளார்.

கொங்குநாடு என கூறுவது விஷமத்தனமானது: கொங்குநாடு என கூறுவது விஷமத்தனமானது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டியளித்துள்ளார். மேலும் கொங்குநாடு என கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கேரள பெண் பாலியல் வன்கொடுமை? -வழக்குப்பதிவு: கேரளாவைச் சேர்ந்த பெண் பழனியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் எஸ்.பி. நேரில் விசாரணை நடத்திய நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றார் முதலமைச்சர்: தலைமைச் செயலகத்தில் பொதுமக்களிடம் நேரில் கோரிக்கை மனுக்களை பெற்றார் முதலமைச்சர். காலையில் இருந்து காத்திருந்தவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தமிழகம்-புதுச்சேரி இடையே பேருந்துகள் இயக்கம்: புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததால், தமிழகம் புதுச்சேரி இடையே பேருந்துகள் இயக்கப்படுகிறது. பிற மாநிலங்களுக்கான பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடருகிறது.

நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு: காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்திருக்கிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரை நூற்றாண்டுக்குப் பின் வசமான கோப்பை: யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் பெனால்ட்டி சூட் அவுட் முறையில் இங்கிலாந்தை வீழ்த்தியது இத்தாலி. 52 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com