விரைவுச் செய்திகள்: சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோவில் கைது - இன்று கனமழைக்கு வாய்ப்பு

விரைவுச் செய்திகள்: சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோவில் கைது - இன்று கனமழைக்கு வாய்ப்பு

விரைவுச் செய்திகள்: சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோவில் கைது - இன்று கனமழைக்கு வாய்ப்பு
Published on

மேகதாது பிரச்னை - நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: மேகதாது அணை பிரச்னை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. 13 சட்டப்பேரவை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: புதுச்சேரியில் ஜூலை 16 முதல் 9-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புவரையான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கல்லூரிகளும் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.

விருதுக்குரியோரை பரிந்துரைக்க வேண்டுகோள்: பத்ம விருதுக்கு தகுதியுள்ளோர் பெயரை பொதுமக்களே அரசுக்கு பரிந்துரைக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். செப்டம்பர் 15 ஆம் தேதி வரை இணையதளத்தில் தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

விஜயகாந்துடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கொரோனா தடுப்பு நிதியாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார் விஜயகாந்த்.

திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம்: அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார். பதவிகளை எதிர்பார்த்து கட்சிக்கு வரவில்லை என பேட்டியளித்திருக்கிறார்.

மரண தருவாயிலும் பயணிகள் உயிர் காத்த ஓட்டுநர்: மாரடைப்பு ஏற்பட்டு உயிர்போகும் நிலையிலும் பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநருக்கு பயணிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

நெல்லையப்பர் கோயில் 3 வாசல்கள் திறப்பு: பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று நெல்லையப்பர் கோயிலில் மூடப்பட்டிருந்த 3 வாசல்கள் திறக்கப்பட்டுள்ளது.

இன்று கனமழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தேனி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்த வெள்ளம்: நீர்வரத்து அதிகரிப்பால் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்தது. அங்கு ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை யாரும் பிரிக்கமுடியாது: தமிழ்நாட்டை யாரும் பிரிக்கமுடியாது என திமுக எம்பி கனிமொழி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். மாநிலம் பாதுகாப்பான ஆட்சியின் கீழ் இருப்பதாகவும் பேட்டியளித்துள்ளார்.

சிவசங்கர் பாபா - மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

காரில் மாவோயிஸ்ட் தப்பிச் சென்றாரா?: பண்ணாரி சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற காரில் மாவோயிஸ்ட் தப்பினதாக தகவல் கிடைத்ததன்பேரில் தமிழ்நாடு - கர்நாடக எல்லைகளில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com