விரைவுச் செய்திகள்: ரெய்டு- இபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு| +2 மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு

விரைவுச் செய்திகள்: ரெய்டு- இபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு| +2 மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு
விரைவுச் செய்திகள்: ரெய்டு- இபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு| +2 மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு

6 மணி நேரத்திற்கு மேலாக தொடரும் ரெய்டு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை ரெய்டு நடத்தினர். 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை தொடருகிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு - ஓபிஎஸ், இபிஎஸ்: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை என ஓபிஎஸ், இபிஎஸ் குற்றச்சாட்டி இருக்கின்றனர். ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பேட்டியளித்திருக்கின்றனர்.

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வடமேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு கனமழை பாதிப்புக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் ஆக.5 வரை நீட்டிப்பு: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 5 வரை நீட்டித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

+2 மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியானது. பிறந்த தேதி, பதிவெண்ணை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

ஒலிம்பிக் - ஊக்கப்படுத்த வெற்றி முழக்கம்: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்த மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் வெற்றி முழக்கமிட்டனர். பொதுமக்களும் வீடியோ வெளியிட்டு ஊக்கப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகள் அமளி: முடங்கியது நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. மாநிலங்களவை நாள் முழுவதும், மக்களவை மாலை 4 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்றி பஸ் வாங்க தடை: மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இன்றி புதிதாக பேருந்துகளை கொள்முதல் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

சென்னை - தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து: சென்னை அண்ணா சாலையில் தனியார் வணிக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்திற்குள் சிக்கியவர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.

தீர்ப்பு நகலின்றி மேல்முறையீடு-விஜய் கோரிக்கை ஏற்பு: சொகுசு கார் வரிவிலக்கு விவகாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் தனி நீதிபதியின் விமர்சனங்களை திரும்பப்பெறவும் விஜய் மேல்முறையீடு செய்திருந்தார். தீர்ப்பு நகலின்றி விசாரிக்க வேண்டும் என்ற நடிகர் விஜயின் கோரிக்கையை ஏற்றது உயர்நீதிமன்றம்.

புதையலுக்காக வீட்டிற்குள் 20 அடி குழி தோண்டிய நபர்கள்: பெரம்பலூர் அருகே புதையல் இருப்பதாக கூறி வீட்டிற்குள் 20 அடி குழிதோண்டிய சம்பவம் நடந்துள்ளது. மாந்திரீகரின் பேச்சை நம்பி செயலில் ஈடுபட்ட ஏழு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கமல்ஹாசனுக்கு அமைச்சர் பதில்: ஆங்கிலத்தில் உள்ள அரசின் கோப்புகளை தமிழில் மொழிபெயர்க்க உத்தரவிட்டிருப்பதாக தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்திருக்கிறார். தமிழ் மொழிக்கென அமைச்சகம் ஏற்கனவே உள்ளதாகவும் கமல்ஹாசனுக்கு பதில் அளித்திருக்கிறார்.

அதிக பாரம் - லாரிகள் தடுத்துநிறுத்தம்: அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச்சென்ற லாரிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்ட அதிகாரிகள் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com