விரைவுச் செய்திகள்: விமானக் கட்டணம் உயர்வு | ஐபிஎஸ்-கள் இடமாற்றம் | ஐபிஎல் அப்டேட்

விரைவுச் செய்திகள்: விமானக் கட்டணம் உயர்வு | ஐபிஎஸ்-கள் இடமாற்றம் | ஐபிஎல் அப்டேட்
விரைவுச் செய்திகள்:  விமானக் கட்டணம் உயர்வு | ஐபிஎஸ்-கள் இடமாற்றம் |  ஐபிஎல் அப்டேட்

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்படும் எனவும், மேலும் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கேரள விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து: கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கப் போவதாக வைரமுத்து அறிவித்துள்ளார். விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம் என அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு ஏன்?- முதல்வர் விளக்கம்: தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா 2ஆவது அலையில் இருந்து மாநிலத்தை மீட்கவே ஊரடங்கு நீட்டிப்பு என விளக்கமளித்துள்ளார்.

காவல் ஆய்வாளர்கள் மீது தாக்குதல்: சென்னையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்தோரை பிடிக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பேரை கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவலர் வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக ஏ.கே.விஸ்வநாதனும், திருவள்ளூர் எஸ்.பி.யாக வருண் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் முழு முடக்கத்தால் குறைந்த கொரோனா: முழு முடக்கம் எதிரொலியாக டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது. திங்கள் முதல் படிப்படியாக தளர்வுகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான கட்டணம் உயர்கிறது: ஜூன் ஒன்றாம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களின் பயண கட்டணம் 13 முதல் 16 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிஏஏ அமல்படுத்தும் பணி தொடக்கம்: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறியவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனந்தகிருஷ்ணன் மறைவு - முதல்வர் இரங்கல்: சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் கொரோனாவால் காலமானார். இணையத்தில் தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இருசக்கர வாகனங்கள் பறிமுதல்: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அனுமதியின்றி காய்கறிகள் மற்றும் பொருட்களை இருசக்கர வாகனங்களில் வியாபாரிகள் கொண்டுசெல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 84 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

மருத்துவ தம்பதி சுட்டுக் கொலை: ராஜஸ்தானில் மருத்துவ தம்பதியினர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெறிச்செயலில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

எழுத்து தேர்வு -அண்ணா பல்.கழகம் விளக்கம்: முந்தைய எழுத்துத் தேர்வுகளின்போது பின்பற்றப்பட்ட வடிவிலேயே மறு தேர்வுக்கான வினாத்தாள் இருக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

ரேஷனில் பொருட்கள் வழங்கக்கோரி போராட்டம்: கடலூர் அருகே ரேசனில் பொருட்கள் வழங்கக்கோரி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: கொரோனாவால் பாதியில் தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ராஜூவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com