விரைவுச் செய்திகள்: ஸ்டெர்லைட் ஆலை | தனியார் பள்ளிக் கட்டணம் | ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி

விரைவுச் செய்திகள்: ஸ்டெர்லைட் ஆலை | தனியார் பள்ளிக் கட்டணம் | ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி
விரைவுச் செய்திகள்: ஸ்டெர்லைட் ஆலை | தனியார் பள்ளிக் கட்டணம் | ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி

ஸ்டெர்லைட் ஆலை - கொரோனா குறைந்தபின் முடிவு: கொரோனா முழுமையாக குறைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்: நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. தினசரி பாதிப்பு 45 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு: மன்சுக் மாண்ட்வியா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் அவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

மீனவர்கள் நலன் காக்கப்படும்- எல்.முருகன்: மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறையின் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார் எல்.முருகன். தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

பாண்டியனின் மனைவி மீதும் வழக்குப்பதிவு: 7 ஆண்டுகளில் சுமார் 7 கோடி ரூபாய் சொத்துகுவித்ததாக முன்னாள் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன்மீது எழுந்த புகாரில், முறைகேடாக சொத்து சேர்த்ததாக பாண்டியனின் மனைவி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனியார் பள்ளி கல்வி கட்டண வசூலுக்கு கட்டுப்பாடு: தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 40 சதவிகித கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என கல்வி கட்டண வசூலுக்கு கட்டுப்பாடு விதித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடுக: யாழ்ப்பாணம் பகுதிகளில் சீனா, பாகிஸ்தான் நிறுவனங்கள் அடியெடுத்து வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதன் பேரில், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. சிறிதரன் வலியுறுத்தி உள்ளார்.

5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஜம்மு காஷ்மீரில் இரு வேறு இடங்களில் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அதில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஹைதி அதிபர் படுகொலை - உலக தலைவர்கள் கண்டனம்: ஹைதி நாட்டில் அதிபர் ஜோவெனல் மாய்சே சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது கொடூரமான செயல் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இறுதிப்போட்டியில் இத்தாலி - இங்கிலாந்து: யூரோ கோப்பை கால்பந்தில் டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து. ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இத்தாலியை சந்திக்கிறது.

விம்பிள்டனில் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி: விம்பிள்டன் டென்னிஸில் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். மற்றொரு முன்னணி வீரர் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார் .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com