விரைவுச் செய்திகள்: காலாவதியான பொருட்கள் -எச்சரிக்கை | ஆக்சிஜன் பற்றாக்குறை - 63 பேர் பலி

விரைவுச் செய்திகள்: காலாவதியான பொருட்கள் -எச்சரிக்கை | ஆக்சிஜன் பற்றாக்குறை - 63 பேர் பலி
விரைவுச் செய்திகள்: காலாவதியான பொருட்கள் -எச்சரிக்கை | ஆக்சிஜன் பற்றாக்குறை - 63 பேர் பலி

காலாவதியான பொருட்கள்-எச்சரிக்கை: காலாவதியான பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்தால் ஆய்வு செய்யும் அதிகாரியே பொறுப்பு என மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம்: வன வளங்களை பாதுகாத்து மேலாண்மை செய்ய பழங்குடியின மக்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சகங்கள் இடையே இன்று கையெழுத்தானது.

நீக்கப்பட்ட சட்டத்தில் வழக்கு - நீதிமன்றம் அதிர்ச்சி: 6 ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்யப்பட்ட சட்டப்பிரிவின்கீழ் தற்போதும் வழக்குகள் பதிவு செய்துவரும் காவல்துறையினரின் செயல் அதிர்ச்சியளிப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

மத்திய அமைச்சரை சந்திக்கும் துரைமுருகன்: மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்திக்கிறார் துரைமுருகன். மேகதாது உள்ளிட்ட தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகள் குறித்து பேசுகிறார்.

3-ஆவது நாளாக தாக்குதல்-மீனவர்கள் வேதனை: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் 3-ஆவது நாளாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. வலைகளை வெட்டி வீசியதால் பல லட்சம் ரூபாய் இழப்பு என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சிதம்பரம் - ஆனி திருமஞ்சன விழா தொடக்கம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா தொடங்கப்பட்டது. கொடியேற்ற நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

அவதூறு புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை: சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கமளித்துள்ளார். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் மலிவான தரம் தாழ்ந்த கருத்துகளை அரசுக்கு எதிராக தெரிவித்து வருவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.

ஓய்வுபெற்ற பின்னும் விடாத லஞ்சம்: தொழில் அதிபர்களிடம் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஐசிஎஃப்-பின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் கைது செய்யப்பட்டார். பதவியில் இருந்தபோது 3 ஆண்டுகளில் 5 கோடி ரூபாய் வரை கையூட்டு பெற்றது விசாரணையில் அம்பலமானது.

குழந்தை விற்பனை - அறக்கட்டளை தலைவர் வாக்குமூலம்: மதுரையில் குழந்தையை விற்க போலி ஆவணங்கள் தயாரித்ததாக அறக்கட்டளை தலைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தையின் உறவினர்களை ஏமாற்றவே இறந்துவிட்டதாக நாடகமாடியதாகவும் காவல்துறை விசராணையில் தெரியவந்துள்ளது.

ஜூலை 9ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: வரும் வெள்ளிக்கிழமை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல், சசிகலா ஆடியோ உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சோனியாவை சந்திக்கும் அம்ரிந்தர்: பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் அம்ரிந்தர் சிங் இன்று சந்திக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 12 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக 12 பாஜக எம்எல்ஏக்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை - 63 பேர் உயிரிழப்பு: இந்தோனேஷிய மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இரு நாட்களில் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் சோகம் நேரிட்டதாக நிர்வாகத்தினர் விளக்கமளித்துள்ளனர்.

பள்ளிக்குழந்தைகள் 150 பேர் கடத்தல்: நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் மீண்டும் 150 குழந்தைகள் கடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினை எதிர்கொள்ளும் இத்தாலி: விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தில் யூரோ கோப்பை கால்பந்து. நள்ளிரவு நடைபெறும் முதல் அரையிறுதியில் இத்தாலியை எதிர்கொள்கிறது ஸ்பெயின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com