விரைவுச் செய்திகள்: நாட்டின் கொரோனா பாதிப்பு | தடுப்பூசி ஆர்வம் | விமானப்படையில் ரஃபேல்

விரைவுச் செய்திகள்: நாட்டின் கொரோனா பாதிப்பு | தடுப்பூசி ஆர்வம் | விமானப்படையில் ரஃபேல்
விரைவுச் செய்திகள்: நாட்டின் கொரோனா பாதிப்பு | தடுப்பூசி ஆர்வம் | விமானப்படையில் ரஃபேல்

நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று கோடியை நெருங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 419 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

பேருந்து சேவைக்கு அனுமதி? - இன்று அறிவிப்பு: கொரோனா பரவல் கட்டுக்குள் வராத மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தளர்வுகள் அளிப்பதில் மிகுந்த கவனம் அவசியம்: பொது முடக்க தளர்வுகளை மிகுந்த கவனத்தோடு அளிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களிடையே ஆர்வம்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது: துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மணிகண்டனை சென்னை அழைத்து வந்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜூலை 3 வரை 'பப்ஜி' மதன் சிறையில் அடைப்பு: ஆபாசப் பேச்சுகள், பண மோசடி புகார்களுக்கு ஆளான பப்ஜி மதனுக்கு வரும் 3 ஆம்தேதி வரை காவல் விடுக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான வருமானத்துக்கு கணக்கு காட்டாமல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

சிவசங்கர் பாபா மீது குவியும் புகார்கள்: சிவசங்கர் பாபா குறித்து புகார் அளிக்க அறிவிக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு 25 அழைப்புகள் வந்துள்ளன. பாலியல் குற்றத்திற்கு உதவி செய்ததாக கைது செய்யப்பட்ட சுஷ்மிதா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுகர், ரத்த அழுத்தமா? - வீடு தேடி மருந்து வரும்: சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்வளுக்கு வீடு தேடிச்சென்று மருந்து வழங்கும் திட்டத்தை கிராமப்புறங்களில் தொடங்க ஆலோசிப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

விமானப்படையில் 2022-க்குள் ரஃபேல் இணைப்பு: 36 ரஃபேல் போர் விமானங்களும் 2022-க்குள் விமானப்படையில் இணைக்கப்படும் என விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். மிக் 21 ரக விமானங்கள் பயன்பாடு 3 ஆண்டுகளுக்குள் நிறுத்தப்படும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

ஈரான் அதிபராகிறார் இப்ராஹிம் ரைசி: ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரைசி வெற்றிபெற்றார். அமெரிக்கா விதித்த தடையை நீக்கப் போவதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு - குழந்தைகளுடன் தப்பிய இளைஞர்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 2 குழந்தைகளுடன் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com