விரைவுச் செய்திகள்: குறையும் கொரோனா | +2 பொதுத்தேர்வு | ஐபிஎல் போட்டி ஆலோசனை
இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 84 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
இருசக்கர வாகனங்கள் பறிமுதல்: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அனுமதியின்றி காய்கறிகள் மற்றும் பொருட்களை இருசக்கர வாகனங்களில் வியாபாரிகள் கொண்டுசெல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் காலமானார்: சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் கொரோனாவால் மரணமடைந்தார். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை முறையை எளிமைப்படுத்தியவர் இவர்.
ஊரடங்கு நீட்டிப்பு ஏன்?- முதல்வர் விளக்கம்: தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா 2ஆவது அலையில் இருந்து மாநிலத்தை மீட்கவே ஊரடங்கு நீட்டிப்பு என விளக்கமளித்துள்ளார்.
தள்ளுவண்டி, டோர் டெலிவரியில் மளிகைப் பொருட்கள்: குடியிருப்பு பகுதிகளில் தள்ளுவண்டி மூலம் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன், தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கலாம்.
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது: கருப்புப்பூஞ்சை நோய், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என மருத்துவ வல்லுநர் குழு உறுதி அளித்துள்ளது. மேலும், முன்கூட்டியே கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம் என நம்பிக்கை அளித்துள்ளது.
+2 பொதுத்தேர்வை பள்ளிகளில் நடத்த திட்டம்: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளிகளிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
மகளின் காதலனைக் கொன்ற தந்தை: ஆந்திராவில் மகளின் காதலனை கொலைசெய்து வயலில் புதைத்துள்ளார் தந்தை. சமாதானம் பேச அழைத்துவந்து கொலை செய்த கொடூரம் தற்போது வெளிவந்துள்ளது.
தடுப்பூசிக்கு வரி விலக்கு - முடிவு எடுக்கப்படவில்லை: கொரோனா தடுப்பூசிக்கு வரி சலுகை அளிக்காமலேயே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்தது. அமைச்சர்கள் குழு பரிசீலித்து முடிவெடுக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
விதிகளை பின்பற்ற வாட்ஸ் அப், பேஸ்புக் சம்மதம்: மத்திய அரசின் டிஜிட்டல் ஒழுங்குமுறை சட்டத்திற்கு கட்டுப்பட கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப் சம்மதம் தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகளை ஏற்க ட்விட்டர் மட்டும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்த மம்தா: யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். பிரதமரின் கூட்டத்திற்கு தாமதமாக வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உடனடியாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகளை கடிந்துகொண்ட அமைச்சர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணியில் 40 சதவிகிதம் அரசு ஊழியர்கள் வேலை செய்யவில்லை என ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் சாடினார்.
பயிர்ச்சேதத்திற்கு இழப்பீடு வழங்குக: கன்னியாகுமரியில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.