விரைவுச் செய்திகள்: மாதந்தோறும் அலகுத்தேர்வு | டோக்கியோ ஒலிம்பிக்

விரைவுச் செய்திகள்: மாதந்தோறும் அலகுத்தேர்வு | டோக்கியோ ஒலிம்பிக்
விரைவுச் செய்திகள்: மாதந்தோறும் அலகுத்தேர்வு | டோக்கியோ ஒலிம்பிக்

மாதந்தோறும் அலகுத்தேர்வு: பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.

சிபிஎஸ்இ +2 மதிப்பெண் - 3 நாட்கள் அவகாசம்: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை இறுதி செய்ய பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 22ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் 25ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக்சிஜன் இன்றி யாரும் இறக்கவில்லை: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்திருக்கிறார்.

மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வனிலை மையம் தெரிவித்திருக்கிறது. நாளை மறுநாள் முதல் 25ஆம் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவித்திருக்கிறது.

அளவுக்கதிகமாக கொண்டுபோவதாக புகார்: அனுமதிக்கப்பட்ட அளவை மீறி டிப்பர் லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்ததன்பேரில் 2 மாதங்களில் 2 ஆயிரம் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

விரைவில் புதிய மாநகராட்சிகள் - கே.என்.நேரு: விரைவில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகப் பணிகளுக்கான டெண்டர்களில் முறைகேடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

மணல் கடத்தல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: நெல்லை மாவட்டம் அம்பை அருகே ஆற்று மணல் கடத்தப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் முறையான விசாரணை தேவை என நீதிதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

கேரளாவில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு: கேரளாவில் இந்த வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மும்பையில் மீண்டும் மழைநீர் தேக்கம்: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் மீண்டும் மழை கொட்டி தீர்த்தது. செம்பூர் பகுதியில் நீர் தேங்கியதால் மக்கள் தவித்துவருகின்றனர்.

மத்திய சீனாவை புரட்டிப்போட்ட வெள்ளம்: மத்திய சீனாவில் பெய்த கனமழையால் கார்கள் அடித்துச்செல்லப்பட்டன. மெட்ரோ சுரங்கங்கள் நீரில் மூழ்கின. வெள்ளப்பெருக்கில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை.

டோக்கியோ ஒலிம்பிக் - வெற்றியுடன் தொடங்கிய ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை வெற்றியுடன் தொடங்கியது ஜப்பான் சாஃப்ட்பால் அணி. ஆஸ்திரேலியாவை எட்டுக்கு - இரண்டு என்ற கணக்கில் வீழ்த்தியது.

பிரிஸ்பேனில் 2032 ஒலிம்பிக் போட்டி: 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் நடத்துவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com