விரைவுச் செய்திகள்: 40 கோடி பேருக்கு கொரோனா அச்சம் | ஆளுநர் மாளிகை முற்றுகை - காங்கிரஸ்

விரைவுச் செய்திகள்: 40 கோடி பேருக்கு கொரோனா அச்சம் | ஆளுநர் மாளிகை முற்றுகை - காங்கிரஸ்
விரைவுச் செய்திகள்: 40 கோடி பேருக்கு கொரோனா அச்சம் | ஆளுநர் மாளிகை முற்றுகை - காங்கிரஸ்

40 கோடி பேருக்கு கொரோனா அச்சம் - ஐசிஎம்ஆர்: இந்தியாவில் இன்னும் 40 கோடி பேருக்கு கொரோனா தொற்று அச்சம் இருப்பதாக ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால் தொடக்கப் பள்ளிகளை முதலில் திறக்க பரிசீலிக்கலாம் என்றும் யோசனை கூறியிருக்கிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட இறக்கவில்லை: கொரோனா இரண்டாவது அலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட இறக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்திருக்கிறார்.

மேகதாது அணைக்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு: மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு தெரிவித்தது. எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு: பெகாசஸ் உளவு மென்பொருள் சர்ச்சையால் நாடாளுமன்றம் இரண்டாவது நாளாக முடங்கியது.எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ஆளுநர் மாளிகை முற்றுகை - காங்கிரஸ் அறிவிப்பு: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நாளை மறுநாள் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. ராகுல்காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் இப்போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

35 தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு என்ற விழாவில், 35 தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமானது. முதலீடு செய்யும் நிறுவனங்களின் விண்ணப்பங்களை நேரடியாக கண்காணிக்கப்போவதாக முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார்.

அப்போலோவில் சசிகலா உள்ளே, ஈபிஎஸ் வெளியே: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை நலம் விசாரிக்க ஈபிஎஸ்சும், சசிகலாவும் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவசரஅவசரமாக மதுசூதனனை நலம் விசாரித்துவிட்டு அப்போலோவில் இருந்து உடனே வெளியே சென்றார் எடப்பாடி பழனிசாமி.

தொழிற்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு?: பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தார் நீதியரசர் முருகேசன்.

குரூப்-1 தேர்வில் 20% இடஒதுக்கீட்டை பின்பற்றுக: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.

மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

சுதந்திர தினத்தையொட்டி தாக்குதல் நடத்த சதி?: சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள டெல்லி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரத்யேக ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா: உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசானின் ஜெஃப் பெசோஸ் பிரத்யேக ராக்கெட்டில் விண்வெளி பயணம் மேற்கொண்டார். டெக்சாஸ் ஏவுதளத்தில் இருந்து மேலும் மூன்று பேருடன் விண்வெளி சென்று திரும்பினார்.

ஒலிம்பிக்கில் தொடரும் கொரோனா அச்சம்: டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது என போட்டி கைவிடப்படுமா என்ற கேள்விக்கு மவுனம் காத்த விளையாட்டு ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதிலளித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com