விரைவுச் செய்திகள்: கூடுதல் தளர்வுகள் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை | ரிஷப் பந்துக்கு கொரோனா

விரைவுச் செய்திகள்: கூடுதல் தளர்வுகள் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை | ரிஷப் பந்துக்கு கொரோனா
விரைவுச் செய்திகள்: கூடுதல் தளர்வுகள் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை | ரிஷப் பந்துக்கு கொரோனா

கூடுதல் தளர்வுகள் - முதல்வர் ஆலோசனை: கொரோனா நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கூடுதல் தளர்வுகள் அளிக்க பரிசீலிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேகதாது - அனைத்துக் கட்சி குழு டெல்லி பயணம்: மேகதாது அணை குறித்து முறையிட தமிழக அனைத்து கட்சி குழுவினர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அமைச்சரை வலியுறுத்துகின்றனர்.

மேகதாது அணை - எடியூரப்பா போட்டி சந்திப்பு: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பிரதமர் மோடியை சந்திக்கிறார். தமிழக அனைத்துக்கட்சி குழு டெல்லி சென்றுள்ள நிலையில் போட்டிக்காக அவரும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 2,405 பேருக்கு கொரோனா தொற்று: தமிழகத்தில் மேலும் 2,405 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30,000க்கு கீழ் இறங்கி 29,950 ஆனது.

ஆங்கிலேயர் கால தேசத்துரோக சட்டம் தேவையா?: ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்கிற்கான சட்டப்பிரிவு தற்போது தேவையா? எனவும் விசாரணை அமைப்புகள் இந்த சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்றும் உச்சநீதிமன்றம் சாடியிருக்கிறது.

நீட் விலக்கு - நீதிமன்றத்தை நாட மா.சுப்ரமணியன் சூசகம்: மத்திய அமைச்சர்களிடம் நீட் விலக்கு, கூடுதல் தடுப்பூசி கேட்டுள்ளதாக டெல்லியில் மா.சுப்ரமணியன் பேட்டியளித்திருக்கிறார். விலக்கு கிடைக்காவிட்டால், ஆணையம் அமைத்து நீதிமன்றத்தை நாடி விலக்கு பெறவும் முயற்சிப்போம் என சூசகமாகக் கூறியிருக்கிறார்.

நீட் - தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் மையங்கள்: தமிழகத்தில் நீட் தேர்வுக்காக மேலும் 4 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.

கூட்டம் கூடாதீர் - மாநகராட்சி எச்சரிக்கை: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இனி கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்கள், சந்தைகளில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

உட்கட்சி தேர்தல் - அவகாசம் கேட்கும் அதிமுக: உட்கட்சி தேர்தலை நடத்த அதிமுக அவகாசம் கேட்கிறது என உறுப்பினர் நீக்கம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளித்திருக்கிறது.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு: புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருக்கிறார். கொரோனா பரவும் சூழல் இருப்பதாக பெற்றோர் அச்சம் தெரிவித்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

2 மாவட்டங்களில் கன மழை பெய்யும்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த மழையால் மரங்கள் முறிந்துவிழுந்தன. நீலகிரி, கோவையில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

டோக்கியோ நட்சத்திர விடுதி ஊழியர்களுக்கு கொரோனா: டோக்கியோவில் ஒலிம்பிக் வீரர்கள் தங்கும் நட்சத்திர விடுதி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் வீரர்கள் தங்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரிஷப் பந்துக்கு கொரோனா: இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்கு கொரோனதொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com