விரைவுச் செய்திகள்: பள்ளிகள் திறப்பு | ஊரடங்கில் தளர்வுகள் | நீட் தேர்வு இணையதளம்

விரைவுச் செய்திகள்: பள்ளிகள் திறப்பு | ஊரடங்கில் தளர்வுகள் | நீட் தேர்வு இணையதளம்
விரைவுச் செய்திகள்: பள்ளிகள் திறப்பு | ஊரடங்கில் தளர்வுகள் | நீட் தேர்வு இணையதளம்

9-12 வகுப்புகளுக்கு செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு வரும் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் 50 சதவிகித மாணாக்கர்களை சுழற்சி முறையில் வரவழைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

செப்.15க்குப் பிறகு 8 வரை பள்ளிகள் திறப்பு?: ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது பற்றி செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகளை திறப்பது பற்றியும் ஆலோசிக்கப்படுமன தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

செப். 1 முதல் கல்லூரிகள் செயல்படும்: வருகிற ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகளையும் சுழற்சி முறையில் நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

50% பார்வையாளர்களுடன் தியேட்டர்களுக்கு அனுமதி: 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திங்கள்கிழமை முதல் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகளுக்கு இரவு 10 மணி வரை அனுமதி: இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இனி, 10 மணி வரை செயல்படலாம். மதிய உணவு வழங்குவதற்காக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

ஆந்திரா, கர்நாடகாவுக்கு பேருந்து அனுமதி: கர்நாடகா, ஆந்திராவுக்கு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு பேருந்துகள் சென்று வர தொடர்கிறது தடை தொடர்கிறது.

கடற்கரையில் மக்களுக்கு அனுமதி: கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி - 100% ஊழியர்களுடன் செயல்படலாம்: தகவல் தொழில்நுட்பம், சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்களையும் திறக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கே.பி.பார்க் குடியிருப்பில் குடிநீர் விநியோகம்: புதிய தலைமுறையின் களஆய்வால் கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. 4 கட்டடங்களில் 864 வீடுகளில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தரமற்ற கட்டடங்கள் - தொடரும் புகார்கள்: புளியந்தோப்பை தொடர்ந்து ராமாபுரத்திலும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டடங்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. பெரம்பலூரில் புகாருக்குள்ளான குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் சீரமைப்பு பணிகளை குடியிருப்புவாசிகள் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறூதியாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் 205 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.

80+ வயதினருக்கு வீடு தேடி தடுப்பூசி: 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.

நீட் தேர்வு இணைய தளம் அறிவிப்பு: நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் தேர்வு மையத்தை http:/neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.

டெல்லியில் கொட்டி தீர்த்த மழை: டெல்லியில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பெய்தது. சாலைகளில் சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் தவித்து வருகின்றனர்.

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் உறுதியானது: பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை உறுதி செய்தது அறிவுரை கழகம். கடந்த 6ஆம் தேதி நடந்த விசாரணையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலக தடகளத்தில் தடம் பதித்த அமித்: 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் நடைப்பந்தயத்தில் இந்திய வீரர் அமித் வெள்ளி வென்று அசத்தியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com