விரைவுச் செய்திகள்: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு | ஓபிஎஸ்-ஈபிஎஸ் | குறைந்துவரும் கொரோனா

விரைவுச் செய்திகள்: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு | ஓபிஎஸ்-ஈபிஎஸ் | குறைந்துவரும் கொரோனா
விரைவுச் செய்திகள்: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு | ஓபிஎஸ்-ஈபிஎஸ் | குறைந்துவரும் கொரோனா

தமிழகத்தில் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெங்கையா நாயுடு கணக்கில் மாற்றம் செய்த டிவிட்டர்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டிவிட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. உறுதிபடுத்தப்பட்ட கணக்கு என்ற தகுதி நீக்கப்பட்டதால் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளது.

கல்லூரி ஆன்லைன் வகுப்புக்கு விரைவில் புதிய விதிகள்: தமிழகத்தில் கல்லூரி ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடு கொண்டுவரப்படுகிறது. புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

+2 தேர்வு நடைபெறுமா? ரத்து செய்யப்படுமா?: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகளை நடத்துவதா? ரத்து செய்வதா? என்பது குறித்து முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இன்று ஆலோசிக்கிறார்.

ஓபிஎஸ்-உடன் ஈபிஎஸ் திடீர் சந்திப்பு: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடந்துள்ளது.

நிலம் கையகப்படுத்தியதில் ரூ.200 கோடி முறைகேடு: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதில் 200 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டது புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலமானது.

9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்தது.

தினசரி பாதிப்பு 1.20 லட்சமாக குறைவு: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரமாக குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 97 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

2ஆவது அலையில் கிராமப்புறங்களில் அதிக பாதிப்பு: கொரோனா 2ஆவது அலையில் நகரங்களைவிட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே பாதிப்பு அதிகம் என டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

17 மாவட்டங்களில் கொரோனா குறைந்துள்ளது: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பிற மாவட்டங்களில் தொற்று பரவல் விரைவில் கட்டுக்குள் வரும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.

கோவை, திருச்சி - இன்று தடுப்பூசி முகாம் கிடையாது: கோவை, திருச்சி, நாகர்கோவிலில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் கையிருப்பு நிலையை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை - ஊருக்குள் வந்த முதலை: மயிலாடுதுறை அருகே முதலை ஊருக்குள் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முதலையை இளைஞர்கள் கயிறு போட்டு மடக்கிப் பிடித்தனர்.

தமிழகத்தில் பரவலாக கனமழை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கி மின் நிலையம் தீப்பற்றியது: திருச்சி அருகே மின்னல் தாக்கியதில் துணை மின் நிலையம் தீப்பற்றி எரிந்தது. இதனால் நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கு 2 ஆண்டுக்கு முடக்கம்: அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டது. பதிவுகள் வன்முறையை தூண்டுவதாக எழுந்த புகாரில் ஃபேஸ்புக் நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

4ஆவது சுற்றில் செரினா, மெத்வதேவ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் செரினா வில்லியம்ஸ் 4ஆவது சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com