விரைவுச் செய்திகள்: கருணாநிதி பிறந்தநாள் | +2 பொதுத்தேர்வு | ஏமாற்றும் வாட்ஸ்அப்?

விரைவுச் செய்திகள்: கருணாநிதி பிறந்தநாள் | +2 பொதுத்தேர்வு | ஏமாற்றும் வாட்ஸ்அப்?

விரைவுச் செய்திகள்: கருணாநிதி பிறந்தநாள் | +2 பொதுத்தேர்வு | ஏமாற்றும் வாட்ஸ்அப்?
Published on

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும் மாநிலம் முழுவதும் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

எதிர்ப்பவர்களும் பாராட்டும் அரசு: திமுகவுக்கு வாக்களிக்காதவர்களும் பாராட்டும் வகையில் அரசு தொடர்ந்து செயல்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தேவேந்திர குல வேளாளர் என சான்று வழங்க உத்தரவு: தமிழகத்தில் 6 சாதிப்பிரிவினருக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சான்றிதழ் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாளில் 2.11 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்: இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 11ஆயிரம் பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

குத்தகைக்கு விடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனே தொடங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும் அந்நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2000, 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம்: கொரோனா நிவாரணத்திற்கு இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நியாய விலைக்கடைகளில் 14 பொருட்கள் தொகுப்பு மற்றும் அர்ச்சகர்களுக்கு 4 ஆயிரம் வழங்கும் திட்டமும் தொடங்கப்படுகிறது.

+2 பொதுத்தேர்வு நடக்குமா? ரத்தாகுமா?: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு தமிழ்நாடு அரசு விரைவில் முடிவெடுக்கவுள்ளது.

சபாநாயகர் பதவிக்கு பாஜக போட்டி: புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு என்.ஆர். காங்கிரஸ் ஆதரவுடன் பாரதிய ஜனதா போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை பங்கீடு உடன்பாடு குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி - விவரம் தர உத்தரவு: தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாய் செலவிடப்பட்ட விவரம் என்ன? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயனாளர்களை ஏமாற்றும் வாட்ஸ்அப்: புதிய தனியுரிமைக் கொள்கைக்கு பயனாளர்களை ஏமாற்றி வாட்ஸ்அப் ஒப்புதல் பெறுகிறது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மல்லையாவின் சொத்துகள் வங்கிகளுக்கு சொந்தம்: இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையாவின் 5 ஆயிரத்து 600 கோடி சொத்துகள் கடன் கொடுத்த வங்கிகளுக்கு சொந்தம் என மும்பை பண மோசடி தடுப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com