மத்திய பட்ஜெட் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்துத் தெரிவித்துள்ளார்.
நடுத்தரவர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய பட்ஜெட்தா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வேயில் தமிழக மக்கள் பயனடையும் வகையில் பட்ஜெட் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையை ரொக்கமாக வழங்க கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இந்த நிதிநிலை அறிக்கையின் பாராட்ட தகுந்த அம்சம் என பாரதிய ஜனதா எம்பி இல கணேசன் தெரிவித்துள்ளார்.