பாடகி சின்மயி கூறியிருக்கும் புகார் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று என தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சிக்கும் திரைத்துறையினர் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டுகொள்ளாதது ஏன் என வினவியுள்ளார். பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ சட்டத்தின் முன் அனைவரும் சமம் .பாதிக்கபட்டவர்களுக்கும், பரிதவித்து நிற்பவர்களுக்கும், தர்ம நியாயத்திற்கும் ஆதரவாக என் குரல் எப்போதும் இருக்கும். தனி மனித ஒழுங்கீனங்களை செய்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும் உரிய விசாரணைக்கு பின் உறுதி செய்யப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
முன்னதாக பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை ட்விட்டரில் முன்வைத்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சின்மயிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.