“ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து கணக்குப்போட்டு 1,000 ரூபாய் கொடுங்க”- தெலங்கானா ஆளுநர் தமிழிசை! #Video

திமுக ஆட்சி தொடங்கிய நாள் எதுவோ, அதிலிருந்து இப்போதுவரை கணக்கு செய்து, ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்கோப்புப்படம்

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். காமராஜர் மனதில் கொண்ட வளர்ச்சியை பிரதமர் மோடி தற்போது வழங்கி கொண்டு உள்ளார்.

காமராஜர் மீது பிரதமர் மோடி மிகவும் மரியாதை கொண்டவர். தமிழ் மொழியின் சிறப்பை பிரான்ஸ் நாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலையை வைப்பதற்கு, தமிழகத்தில் இருந்து ஒரு அரசியல் தலைவர் கூட நன்றியும் பாராட்டும் தெரிவிக்கவில்லை.

இதில் இருந்தே தமிழை இவர்கள் அரசியலுக்காகவும் தேவைக்காகவும் பயன்படுத்துகின்றனர் என்பது தெரிகிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழகத்தை சார்ந்த நபர்கள் பாடுபட வேண்டும்.

தமிழ் பாடத்தில் 50,000 நபர்கள் தோல்வி அடையும் சூழல் தமிழகத்தில் உள்ளது. அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பு பணத்தை எடுத்தால் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுக்கும் அளவிற்கு வளர்ச்சி கொண்டு வர முடியும் என்றே பிரதமர் கூறி இருந்தார். அந்த வளர்ச்சியை பிரதமர் வழங்கி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி@PMModi Twitter

செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ஆயிரம் ரூபாயை தருவதாக கூறிய இந்த அரசு, என்றைக்கு ஆட்சிக்கு வந்ததோ அந்த தேதியில் இருந்து கணக்கு செய்து பணத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com