“ஆணவ சாம்ராஜ்யம் சரியப்போகிறது... இது சபதம்!” - தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவிற்கு மறைமுகமாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களின் துயரங்கள் குறித்து பேசியதற்காக, தன்னை சமூக வலைதளங்கள் மூலம் காயப்படுத்துவதாக, திமுகவிற்கு மறைமுகமாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து மக்களின் குரலாய் பேசியதற்கு... திண்டாடும் மாடலை வைத்து.... திண்டாடிக் கொண்டிருப்பவர்கள், என்னை சமூக வலைதளங்களில் குத்திக்கிழித்து தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

அவர்களின் மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போகிறது...சரியப்போகிறது... இது சபதம்! அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போட்டவர்கள்... ஆடி ஒடுங்கியிருக்கும் சரித்திரத்தை நான் இங்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்...

(தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் அங்கு பார்ப்பேன்....எவ்வளவு வேண்டுமானாலும் சமூக வலைத்தளங்களில் காயப்படுத்துங்கள்.... சமூகத்திலும் காயப்படுத்துங்கள்..... அந்த ரத்தத்தில் தோய்த்து.... நீங்கள் சரியும் சரித்திரத்தை எழுத நான் தயார்..... இது அப்பழுக்கற்ற பொது வாழ்வில் வாழும் ஒரு பெண்ணின் சபதம்!” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com