“கஷ்டமான முடிவை இஷ்டமாக எடுத்திருக்கிறேன்” - பாஜக-வில் மீண்டும் இணைந்தபின் தமிழிசை சொன்ன பஞ்ச்!

தனது ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்தபிறகு முதன்முறையாக இன்று காலை சென்னையில் அமைந்துள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றார் அவர். அங்கு தன்னை மீண்டும் பாஜகாவில் இணைத்து கொண்டார் தமிழிசை.
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்pt

பாஜகவில் மாநில பொதுச் செயலாளர், துணைத் தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவரும், 2014 - 2019 வரை தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்தவருமான தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும், தெலங்கானாவின் ஆளுநராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் ஒருசில தினங்களுக்கு முன்பு (மார்ச் 18) அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்
ஆளுநர் பதவி ராஜினாமா.. மீண்டும் தேர்தலில் களமிறங்கும் தமிழிசை.. புதுச்சேரியில் போட்டியா?
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தபின் உரிய மரியாதையுடன் புதுச்சேரியில் இருந்து வழியனுப்பி வைக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன்
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தபின் உரிய மரியாதையுடன் புதுச்சேரியில் இருந்து வழியனுப்பி வைக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன்புதிய தலைமுறை

தனது ஆளுநர் பதவியை ரஜினாமா செய்தபிறகு இன்று முதன்முறையாக சென்னையில் அமைந்துள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார் தமிழிசை. தன்னை மீண்டும் பாஜக-வில் இணைத்துக் கொள்ள வருகை தந்திருந்தார் அவர். அங்கு அவருக்கு தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை , கட்சி தொண்டர்கள் என அனைவரும் சிறப்பு வரவேற்பு வழங்கினர்.

இந்நிலையில் கட்சியில் தன்னை மீண்டும் இணைத்து கொண்ட தமிழிசை, இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் தெரிவிக்கையில், “தம்பி அண்ணாமலை சொல்லும் போது கஷ்டமான ஒரு முடிவை எடுத்துள்ளீர்கள் என்று கூறினார். ஆமாம்! கஷ்டமான முடிவுதான். ஆனால், கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்திருக்கிறேன். நானூறு பாராளுமன்ற உறுப்பினர்களோடு நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதற்காக இணைந்திருக்கிறேன்” என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் எந்தக் கட்சியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதுச்சேரி, வடசென்னை ஆகிய தொகுதிகளில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அரசியலில் தமிழிசை...

2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் கனிமொழி கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன். இதில் தோல்வியை தழுவிய இவர், அடுத்த ஒரு சில மாதங்களிலேயே தெலுங்கானாவின் ஆளுநராக குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் பொறுப்பினையும் ஏற்றிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் (மார்ச் 18) தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதம் மார்ச் 19 (நேற்று) ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசையின் ராஜினாமா ஏற்பு.. புதுச்சேரி, தெலங்கானாவில் ஆளுநர் ஆகிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com