பெண்கள் முன்னுரிமை பெற பாரதி பாடிய பெண்ணுரிமையே காரணம்: தமிழிசை செளந்தரராஜன்!
"எங்களைப் போன்ற பெண்களெல்லாம் இன்று முன்னுரிமை பெற்றிருக்கிறோம் என்றால், அதற்கு அன்று பாரதியார் பாடிய பெண்ணுரிமைதான் காரணம்" என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் 139-வது பிறந்தநாளை இன்று அனைத்து தரப்பினரும் கொண்டாடி வரும் நிலையில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பாரதியாரின் உருவப் படத்திற்கு மலர்கள்தூவி மரியாதை செலுத்தியது, பாரதியார் வேடமிட்ட குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பாரதியாரின் நினைவைப் போற்றியுள்ளார்.
இந்திய சுதந்திரத்திற்காகவும் பெண்கள் உரிமைகளுக்காகவும் தனது கவிதைகளால் போராடியவர் பாரதியார். செய்யுள் வடிவில் இருந்த கவிதைகளை அனைவருக்கும் புரியும்படி எழுதி விடுதலையுணர்வை ஊட்டியதில் இவரது எழுத்துக்கு முக்கியப் பங்குண்டு.
தமிழகத்தின் பெருமை என்று கொண்டாடப்படும் பாரதியார் 1982 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இதே டிசம்பர் 11 ஆம் தேதிதான் பிறந்தார். அவரது, 139-வது பிறந்தநாளைக் தமிழகம் முழுவதும் கொண்டாடி வரும் வேளையில், தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர். தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
”எங்களைப் போன்ற பெண்களெல்லாம் இன்று முன்னுரிமை பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு அன்று மகாகவி பாரதியார் பாடிய பெண்ணுரிமைதான் காரணம்... மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தில் அவர்தம் நினைவை போற்றுவோம்” என்று பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.