தமிழிசை சௌந்தரராஜன் - தவெக தலைவர் விஜய்
தமிழிசை சௌந்தரராஜன் - தவெக தலைவர் விஜய்PT

”சினிமாவில் டேக் எடுப்பது போல் எளிதானது அல்ல..” தவெக தலைவர் விஜயை விமர்சித்த தமிழிசை!

பரந்தூருக்கு சென்று போராட்ட மக்களை பார்த்த தவெக தலைவர் விஜய், விமான நிலையத்திற்கு வேறு இடம் தேர்ந்தெடுக்குமாறு சொன்னதை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
Published on

பரந்தூரில் விமான நிலையம் வருவதை எதிர்த்தும், அதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தவிருப்பதை எதிர்த்தும் சுற்றியுள்ள கிராம மக்கள் 900 நாட்களை கடந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த சூழலில் போராடும் மக்களை பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பார்த்த நிலையில், நேற்று தவெக தலைவர் விஜய் கிராம மக்களை நேராக சென்று சந்தித்து பேசினார்.

மக்களை சந்தித்து அவர் பேசுகையில், “விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் வருவதை ஏற்க இயலாது. விமான நிலையம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை; வளர்ச்சிக்கு நான் எதிரானவன் இல்லை பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றே நான் கூறுகிறேன்” என்று கூறியிருந்தார்.

மேலும், “விமான நிலையத்திற்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசையும் மாநில அரசையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜயின் பேச்சுகுறித்து விமர்சித்திருக்கும் முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விஜய் பரந்தூருக்கு பறந்துசென்றாரா இல்லை மறந்து சென்றாரா என விமர்சித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் - தவெக தலைவர் விஜய்
“வளர்ச்சி வேண்டுமென்றால் சிறு சிறு சூழியல் பாதிப்புகளை பெரிதாக்கக்கூடாது” அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சினிமாவில் டேக் எடுப்பது போல் எளிதானது அல்ல..

விஜயின் பேச்சுகுறித்து விமர்சித்தது குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ”விஜய் ஆளுங்கட்சியை எதிர்த்து பேசியிருக்கிறார் என்பதை விட, நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பேசியிருக்கிறார் என்பதாகவே நான் பார்க்கிறேன். விமான நிலையம் அமைக்க இடம்பார்த்து கொடுத்தது ஆளும் அரசு தான், அதிலும் நான்கு இடங்களை தேர்வுசெய்து, அதில் இரண்டு இடங்களை இறுதிசெய்த பின்னரே, முறையாக விமான நிலையம் அமைக்க இடம் உறுதிசெய்யப்பட்டது.

அப்படி கொடுக்கப்பட்ட இடம் என்பது அங்கு போராடும் மக்களின் நலனுக்காக தான், பின்வரும் அவர்களின் வாரிசுகளின் நலனுக்காக தான்.

இதைக்கூறுவதால் எங்களை விவசாயிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்வது முறையாகாது, நாங்கள் இது தமிழக மக்களின் வளர்ச்சிக்கானதாகவே பார்க்கிறோம். விஜய் சொல்வதை போல் வேறு இடம் கொடுப்பது என்றால் கொடுக்க சொல்லுங்கள், ஆனால் ஒரு விமான நிலையத்திற்கு இடம் தேர்வுசெய்வது என்பது சினிமாவில் ஒரு டேக் எடுப்பது போல் சாதாரண விசயமல்ல.

மீனாம்பாக்கம், பெங்களூரு விமான நிலையங்களுக்கான தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் தொடர்பு, சாலை தொடர்புகளை எல்லாம் சரியாக ஆய்வுசெய்த பிறகு தான் தமிழக அரசு இந்த இடத்தை தேர்வுசெய்துள்ளது. கிட்டத்தட்ட 900 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடும்போதெல்லாம் மறந்துவிட்டு, இப்போது பறந்துவந்து இடத்தை மாற்றுங்கள் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அரசியலுக்காக பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜய் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்” என்று பேசியுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் - தவெக தலைவர் விஜய்
பரந்தூர் ஏன் பட்டியலில் வந்தது? விஜய் மாற்று இடம் தேர்வு செய்திருக்கிறாரா? கேள்வி எழுப்பும் அண்ணாமலை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com