பாஜகவில் சேரும்படி அஜித்தை அழைக்கவில்லை : தமிழிசை அதிரடி
அஜித்தை பாஜகவில் சேரும்படி தாங்கள் அழைக்கவில்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம்பிடித்து வருபவர் நடிகர் அஜித் குமார். அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த 10ஆம் தேதி அன்று வெளியானது. கூடவே நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படமும் ஒன்றாக வெளியானது. உலகம் முழுவதும் ‘பேட்ட’ திரைப்படம் அதிக திரைகளில் வெளியானது. அதேசமயம் இந்திய அளவில் அதிக திரைகளில் வெளியாகவிட்டாலும், தமிழகத்தில் ‘விஸ்வாசம்’ தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தது. இதனால் ‘பேட்ட’ ,‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டக்குரிய விமர்சனங்களைப் பெற்றன.
இந்த சூழலில் திருப்பூரில் அஜித் ரசிகர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அஜித்தை பாராட்டியதோடு, அவரது ரசிகர்கள் பிரதமர் மோடியின் சாதனையை பரப்ப வேண்டும் என்றார். இது தமிழக அரசியலில் பூதகரமாக வெடித்தது. இந்நிலையில் தான் அரசியல் சாயத்தில் இருந்து காக்க திடீரென அதிரடி அறிக்கையை அஜித் வெளியிட்டார்.
அந்த அறிக்கை சமூக வலைதளங்கள், செய்தி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்து நேற்று முதல் ட்ரெண்ட்டிங் ஆனது. படம் தொடர்பான சர்ச்சைகள், படத்தின் வெற்றி தோல்வி பேச்சுகள், படத்திற்கான விளம்பரங்கள் என எந்த ஒரு விஷயத்துக்கும் வாய் திறக்காத அஜித், தன் மீதும் தன் ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூசப்படுவதாக தெரிந்த கணமே அறிக்கை விட்டு பலரின் கேள்விகளுக்கு நடிகர் அஜித்குமார் முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் அஜித்தின் அந்த அறிக்கை திரைத்துறையையும் தாண்டி பல விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் சினிமா நட்சத்திரங்கள் சிலர் கோலோட்சி வரும் சூழலில் தனது நிலைப்பாடை வெளிப்படையாக தெரிவித்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அஜித்தின் அந்த அறிக்கை குறித்து பேசிய தமிழிசை, “அஜித்தை பாஜகவில் சேரும்படி தாங்கள் அழைக்கவில்லை என்றும் அரசியல் தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.