"கழிப்பறையில் தங்கினோம், போதிய உணவுகூட இல்லை" - மலேசியா சென்ற தமிழர்கள் குற்றச்சாட்டு

"கழிப்பறையில் தங்கினோம், போதிய உணவுகூட இல்லை" - மலேசியா சென்ற தமிழர்கள் குற்றச்சாட்டு
"கழிப்பறையில் தங்கினோம், போதிய உணவுகூட இல்லை" - மலேசியா சென்ற தமிழர்கள் குற்றச்சாட்டு

சுற்றுலா விசாவில் மலேசியா சென்ற தமிழர்களை மலேசியா அரசு சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

பணி ஆணை இல்லாமல் சுற்றுலா விசாவில் மலேசியா நாட்டுக்கு கூலி வேலை தேடி சென்ற சுமார் 2000 தமிழர்கள், மீண்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வேலை தேடிய சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆண் - பெண் தொழிலாளர்கள், சில ஏஜென்டுகளை நம்பி, சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு சென்றுள்ளார்கள். அதற்காக ஒவ்வொருவரும் 80 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி ஏஜென்டுகளிடம் கட்டணமாக கொடுத்துள்ளனர்.

அவ்வாறாக, சுற்றுலா விசாவை கையில் வைத்துக்கொண்டு வேலை தேடி வருபவர்களை, கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து மலேசியா நாட்டு போலீசார் கைது செய்துவருகிறார்கள். அதில் சிக்கிய 200 தமிழர்கள் கடந்த ஞாயிற்று கிழமை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று மேலும் 185 பேர் திருச்சி விமானநிலையத்தில் வந்திறங்கினார்கள். அவர்களை, மலேசியா நாட்டு போலீசார் கழிப்பறைகளில் தங்க வைத்து, போதிய உணவுகூட வழங்காமல், துன்புறுத்தியதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com