தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ட்விட்டர்

எப்படி இருக்கப்போகிறது தவெக கொடி? கொள்கைத் தலைவர்கள் யார்? வெளியான முக்கிய தகவல்

திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தொடங்கினார். அக்கட்சியின் முதல்மாநாடு திருச்சியில் உள்ள சிறுகனூரில் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 21-ஆம் தேதி திருச்சி சிறுகனூரில் இந்த மாநாடு நடத்தப்படலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் - விஜய்
தமிழக வெற்றிக் கழகம் - விஜய்

இந்த மாநாட்டில் வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்துவைத்து, ஏற்றி வைப்பார் எனக் கூறப்படுகிறது. அதேசமயத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதளப்பக்கங்களில் cover imageகளில் இருக்கும் மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு நிறத்திலேயே கொடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை விளக்கும் வகையிலும் கொடி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கட்சியின் கொள்கைத் தலைவர்களாக காமராஜர், அம்பேத்கர், பெரியார் என மூன்று தலைவர்கள் இருப்பார்கள் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com